காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியுடன் கைகோர்த்தது காங்கிரஸ்

காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியுடன் கைகோர்த்தது காங்கிரஸ்
காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியுடன் கைகோர்த்தது காங்கிரஸ்

ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியுடன், காங்கிரஸ் கட்சி தோழமையுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. 

ஜம்மு-காஷ்மீரில் பாரமுல்லா, ஸ்ரீநகர், அனந்த்நாக், லடாக், உதம்பூர், ஜம்மு ஆகிய 6 மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த 6 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11, 18, 23, 29 மற்றும் மே 6ம் தேதி 5 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், அனந்த்நாத் தொகுதிக்கு மட்டும் 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.  

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் இடையே தோழமை ரீதியிலான கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தேசிய மாநாட்டு கட்சி இடம்பெற்றிருந்தது. அப்போது ஒரு தொகுதியை மட்டும் அக்கட்சி கைப்பற்றியது. ஆனால், இந்த முறை நேடியான கூட்டணி உடன்பாடு எட்டப்படவில்லை. ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறுகையில், “ஜம்மு மற்றும் உதம்பூரில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. நான் ஸ்ரீநகர் தொகுதியில் போட்டியிடுகிறேன். அனந்த்நாத் மற்றும் பாரமுல்லா தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகளிடையே ஒரு தோழமை ரீதியிலான போட்டி இருக்கிறது. லடாக் தொகுதி குறித்து பேசி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

குலாம் நபி ஆசாத் கூறுகையில், “தோழமை ரீதியிலான போட்டி என்றால் இருதரப்பினரிடையே போட்டி இருக்கும். இரு தரப்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். ஆனால், காங்கிரஸ் அல்லது தேசிய மாநாட்டு ஆகியவற்றில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் இருதரப்பினரும் வெற்றி பெற்றதாக அர்த்தம்” என்றார். 

கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் மெஹபூபாவின் மக்கள் ஜனநாயகக் கட்சி இடம்பெற்றிருந்தது. ஆனால், பாஜக ஆதரவை வாபஸ் பெற்றதால் ஜம்மு-காஷ்மீரில் மெஹபூபாவின் ஆட்சியே கலைந்தது. அதனால், இந்த முறை இருவரும் இணைந்து போட்டியிட வாய்ப்பில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com