சென்னை மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சென்னை மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சென்னை மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்களின் பட்டியலில் சென்னை சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

யுனெஸ்கோ அமைப்பு கைவினைப் பொருள்கள், நகர வடிவமைப்பு, திரைப்படம், உணவு முறை, இலக்கியம், ஊடகக் கலை மற்றும் இசை என 7 பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பு செய்யும் நகரங்களை ‘படைப்பாக்க நகரங்கள்’ (Creative Cities) என்ற சிறப்புடன் அங்கீகாரம் அளித்து வருகின்றது. அதன்படி, பாரம்பரிய இசைக்கு சென்னை அளித்து வரும் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையையும் யுனெஸ்கோ அமைப்பு சேர்த்தது. கடந்த 2004-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் உள்ள 72 நாடுகளைச் சேர்ந்த 180 நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

இந்நிலையில், யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்களின் பட்டியலில் சென்னை சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சென்னை மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது வளமைமிக்க கலாசாரத்தில் சென்னையின் பங்களிப்பு விலை மதிப்பு இல்லாதது. இந்தியாவுக்கு இது பெருமைமிகு தருணம்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com