டிரெண்டிங்
சாதி, மத வேறுபாடுகளைக் களைய வேண்டும்: முதல்வர் பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து
சாதி, மத வேறுபாடுகளைக் களைய வேண்டும்: முதல்வர் பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து
நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாட்டில் உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றில் நாட்டை முன்னெடுத்துச் செல்ல அனைவரும் உறுதி ஏற்போம் என ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இந்திய நாட்டின் தனிச் சிறப்பான வேற்றுமையில் ஒற்றுமை காணும் உணர்வினை காத்திட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சாதி, மத வேறுபாடுகளைக் களைந்து, நமது நாட்டை வளமையும், வலிமையும் மிக்கதாக உருவாக்கிட நாம் அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.