\
தினகரன் - எடப்பாடி பழனிசாமி இடையே உச்சக்கட்ட பனிப்போர்

தினகரன் - எடப்பாடி பழனிசாமி இடையே உச்சக்கட்ட பனிப்போர்

தினகரன் - எடப்பாடி பழனிசாமி இடையே உச்சக்கட்ட பனிப்போர்
Published on: 

அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையேயான பனிப்போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

‌அதன் வெளிப்பாடாக அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான டாக்டர் நமது எம்.ஜி.ஆரில், முதலமைச்சர், மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்வுகள் மற்றும் அவர்களின் படங்கள் கடந்த இரண்டு நாட்களாக பிரசுரிக்கப்படவில்லை. ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குப் பின் கட்சிப்பணிகளில் முழுவீச்சில் ஈடுபடப்போவதாக டிடிவி தினகரன் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில், அவரின் ஆதரவாளர்களாக கருதப்படும் எம்.எல்.ஏக்களை முதலமைச்சர் எடப்பா‌டி பழனிசாமி தனது ‌பக்கம் இழுக்க முயற்சிப்பதாக கூறப்படும்நிலையில், இருவருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com