பணம் கொடுத்து வெற்றி: விஷால் மீது போலீசில் புகார்

பணம் கொடுத்து வெற்றி: விஷால் மீது போலீசில் புகார்

பணம் கொடுத்து வெற்றி: விஷால் மீது போலீசில் புகார்
Published on

நடிகர் விஷால் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தேவராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

நடிகர் சங்க பொதுச்செயலாளரான விஷால், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து சமூக பிரச்னைகளிலும் அவ்வப்போது கவனம் செலுத்தி வந்த விஷால் தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் போட்டியிடுகிறார். நேரடியாக அரசியல் களத்தில் முதல்முறையாக களமிறங்கியுள்ள விஷாலுக்கு ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி கொடுக்குமா..? அல்லது பாதகமாக அமையுமா..? என்பது வாக்கு எண்ணிக்கை நாளான டிசம்பர் 24 ஆம் தேதிதான் தெரியவரும்.

இந்நிலையில் நடிகர் விஷால் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் தேவராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார்.  தயாரிப்பாளர், நடிகர் சங்க தேர்தலில் பணம் கொடுத்து விஷால் வெற்றி பெற்றதாக ஃபேஸ்புக்கில் தகவல் பரவுவதாக கூறியுள்ள அவர், ஃபேஸ்புக்கில் வெளியான கருத்து பரிமாற்றங்களை அலட்சியமாக கருதாமல் அதுகுறித்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com