\
திமுக வேட்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகப் புகார் : அதிமுக பிரமுகர் மீது வழக்கு

திமுக வேட்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகப் புகார் : அதிமுக பிரமுகர் மீது வழக்கு

திமுக வேட்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகப் புகார் : அதிமுக பிரமுகர் மீது வழக்கு
Published on

கோவையின் தொண்டாமுத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளரை மிரட்டும் வகையில் வீடியோ வெளியிட்ட புகாரில் அதிமுக பிரமுகர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மாநகராட்சி ஒப்பந்ததாரரான அதிமுகவைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் அண்மையில் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுக வழக்கறிஞர்கள் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தனர். அந்த புகார் மனுவை கோவை வடவள்ளி காவல்துறையினருக்கு தேர்தல் அதிகாரிகள் அனுப்பிய நிலையில், அதன்பேரில் சந்திரசேகர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com