துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக புகார்; தூத்துக்குடி எஸ்ஐ மீது வழக்குப்பதிவு!

துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக புகார்; தூத்துக்குடி எஸ்ஐ மீது வழக்குப்பதிவு!

துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக புகார்; தூத்துக்குடி எஸ்ஐ மீது வழக்குப்பதிவு!
Published on

துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தூத்துக்குடி எஸ்.ஐ. இசக்கிராஜா மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தை சேர்ந்தவர் இசக்கி பாண்டியன். இவர் நெல்லை நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த பேச்சிமுத்து மீது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சில காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் பேச்சுமுத்துவுக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வாங்குவதற்கு வழக்கறிஞர் இசக்கி பாண்டியன் முயற்சித்தார். ஆனால் நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் நெல்லை நீதிமன்றத்தில் பேச்சிமுத்துவை சரணடைய செய்ய நேற்று வழக்கறிஞர் இசக்கி பாண்டியன் ஏற்பாடு செய்தார். இதனை அறிந்த தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, இசக்கிபாண்டியனின் செல்போனில் பேசி, சம்பந்தப்பட்ட வாலிபர் மீது எங்கள் காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளதால் அவரை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென கேட்டுள்ளார். அதற்கு வழக்கறிஞர் மறுத்தாக கூறப்படுகிறது.

இதனிடையே சம்பந்தப்பட்ட வாலிபர் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையறிந்த எஸ்.ஐ. இசக்கிராஜா நெல்லை நீதிமன்றம் அருகே காரில் சாதாரண உடையில் சிலருடன் காரில் நின்று சென்று கொண்டிருந்தார். அப்போது நீதிமன்றத்தில் இருந்து வெளியே தனது உதவியாளருடன் பைக்கில் வந்த வழக்கறிஞர் இசக்கிபாண்டியன் மீது காரை மோத முயற்சித்தாக கூறப்படுகிறது.

அத்துடன் இசக்கிராஜா துப்பாக்கியை காட்டி இசக்கிபாண்டியனை சுட்டு விடுவதாக மிரட்டியும் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதனை கண்டித்து நெல்லை நீதிமன்றத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பாளையங்கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு எஸ்.ஐ. இசக்கிராஜா மீது வழக்குப்பதிவு செய்தும், துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதையடுத்து அங்கு வந்து இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், எஸ்.ஐ. மகேஷ் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, வழக்குப்பதிவு செய்து போலீஸ் உயரதிகாரிகளிடம் நடந்த விவரங்களை கூறுவதாக கூறியதை அடுத்து அங்கிருந்து வழக்கறிஞர்கள் கலைந்து சென்றனர்.

இது குறித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சக்கிபாண்டியன் புகார் செய்தார். இதன்பேரில் எஸ்.ஐ. மகேஷ் குமா விசாரணை நடத்தி, ஆபாசமாக பேசியது, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் எஸ்.ஐ. இசக்கிராஜா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com