குருபூஜையில் விதிமீறியதாக டிடிவி தினகரன், கருணாஸ் மீது வழக்கு
விதிமுறைகளை மீறி மருதுபாண்டியர் குருபூஜைக்குச் சென்றதாக அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் உட்பட 68 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட காளையார்கோவிலில் மருதுபாண்டியர்களின் 216வது குருபூஜை நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 1 அமைப்பைச் சேர்ந்தவர்கள் 3 வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாது, பட்டாசு வெடிக்கக்கூடாது என்ற விதிகள் வகுக்கப்பட்டிருந்தன. அந்த விதிகளை மீறியதாக டிடிவி தினகரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் உள்ளிட்ட 68 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின் பெயரில் காளையார்கோவில் காவல்நிலையத்தினர் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர்.