தபால் ஓட்டை 7,500 ரூபாய்க்கு விற்ற காவலர் மீது வழக்குப்பதிவு

தபால் ஓட்டை 7,500 ரூபாய்க்கு விற்ற காவலர் மீது வழக்குப்பதிவு

தபால் ஓட்டை 7,500 ரூபாய்க்கு விற்ற காவலர் மீது வழக்குப்பதிவு
Published on

7,500 ரூபாய் பணத்திற்காக தன்னுடைய தபால் வாக்கை விற்ற காவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்தவர் அந்தோணி சேகர். இவர் உவரி காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். தேர்தல் பணிகளில் ஈடுபடும் காவலர்கள், அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்கள் ஆகியோர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் தபால் வாக்குப் பதிவு செய்யும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் காவலரான அந்தோணி சேகருக்கும் தபால் வாக்களிக்கும் வசதி உள்ளது.

ஆனால் அந்தோணி சேகரோ தனது தபால் வாக்கை திமுகவை சேர்ந்த ஜெயராஜ் என்பவருக்கு ரூ.7,500 பணத்திற்காக விற்று விட்டார். இதனையடுத்து தபால் வாக்கை விற்பனை செய்த குற்றத்திற்காக அந்தோணி சேகர் மீது திசையன்விளை காவல் நிலையத்தில் பிரதிநிதித்துவ மக்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 4-வது தேர்தல் பறக்கும் படை அதிகாரி தினேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com