'கன்னத்தில் உள்ள கொழுப்பு' - ரிஷப் பண்ட் மற்றும் ரோஹித் சர்மாவை கிண்டலடித்த யுவராஜ்

'கன்னத்தில் உள்ள கொழுப்பு' - ரிஷப் பண்ட் மற்றும் ரோஹித் சர்மாவை கிண்டலடித்த யுவராஜ்
'கன்னத்தில் உள்ள கொழுப்பு' - ரிஷப் பண்ட் மற்றும் ரோஹித் சர்மாவை கிண்டலடித்த யுவராஜ்

ரிஷப் பண்ட் மற்றும் ரோஹித் சர்மாவின் பிட்னெசை யுவராஜ் சிங் நகைச்சுவையாக கிண்டலடித்துள்ளார்

பரபரப்பாக சென்றுகொண்டு இருக்கிறது ஐபிஎல். 50 போட்டிகளை கடந்துவிட்டாலும் இரண்டு தெளிவான முடிவுகள் மட்டுமே கிடைத்துள்ளன. ஒன்று, மும்பை உறுதியாக உள்ளே சென்றுவிட்டது. மற்றொன்று, சென்னை உறுதியாக வெளியே சென்றுவிட்டது. மற்ற அணிகள் எல்லாம் சுவர்மேல் பூனை போல உள்ளன. அடுத்தடுத்த போட்டிகள்தான் பிளே ஆஃப் அணிகளை உறுதி செய்யும். தற்போது மும்பை அணி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டெல்லி 3வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை டெல்லியும் மும்பையும் மோதின. அதில் மும்பை வெற்றி பெற்றது. அந்தப் போட்டிக்கு பின்னர் டெல்லி வீரர் ரிஷப் பண்டும், மும்பை வீரர் ரோஹித் சர்மாவும் மைதானத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அந்த புகைப்படத்தை பதிவிட்டிருந்த மும்பை அணி, ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா இடையேயான சிக்ஸ் அடிக்கும் போட்டிக்காக காத்திருக்கிறோம் என குறிப்பிட்டிருந்தது.

அதற்கு பதிலளித்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங், ''அல்லது இருவரின் கன்னத்தில் உள்ள கொழுப்பு குறித்த போட்டி'' என குறிப்பிட்டு நகைச்சுவையாக நக்கலடித்துள்ளார். அவரது பதிவில் ரோஹித் சர்மா மனைவியையும் யுவராஜ் டேக் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com