நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மூடியுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் ஏற்பட்ட போட்டியில் அதிமுகவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. குன்னூர் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ சாந்தி ராமு மற்றும் விவசாயப்பிரிவு நிர்வாகி பாரதியார் இடையே கைகலப்பு ஏற்பட்டது.