மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை தனது கைப்பாவையாக மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், ’ஜெயலலிதா ஏற்றுக்கொள்ளாத அனைத்து கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களுக்கு துரோகம் செய்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை ஆட்டிப்படைத்து தனது கைப்பாவையாக மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. மக்களின் நம்பிக்கையை இழந்த பழனிசாமி அரசு, ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்டோபர் 3ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்ததும்’ என்றார்.