மேற்கு வங்கம் : பாஜக பெண் எம். பி முகத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயன வண்ணப் பொடி வீச்சு!

மேற்கு வங்கம் : பாஜக பெண் எம். பி முகத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயன வண்ணப் பொடி வீச்சு!
மேற்கு வங்கம் : பாஜக பெண் எம். பி முகத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயன வண்ணப் பொடி வீச்சு!

மேற்கு வங்க மாநில நடிகையும், அம்மாநில பாஜகவின் பொதுச் செயலாளரும், ஹூக்ளி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான லாக்கெட் சாட்டர்ஜி முகத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயன வண்ணப் பொடி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சதி என பாஜக குற்றம் சுமத்தியுள்ளது. அந்த மாநிலத்தில் 8 கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. 

“இது வெறுப்புணர்வின் உச்சம். நான் ஹூக்ளியில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டிருந்தேன். திடீரென என முகத்தில் வேகமாக ஒரு பொருள் பட்டது போல இருந்தது. நான் சுதாரித்துக் கொண்டு பார்த்த போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பேட்ச் அணிந்த நான்கு பேர் எனக்கு பக்கத்தில் வந்து நின்றனர். அவர்கள் தான் இதை செய்திருக்க வேண்டும்” என லாக்கெட் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார். இதனை பத்திரிகையாளர் முன்பு அழுதபடி தெரிவித்திருந்தார் அவர். 

ஒரு பெண்ணுக்கு இப்படி எல்லாம் நடக்கும் அநீதியை ஒருபோது பொறுத்துக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். முதல்வர் மம்தாவை எதிர்த்து போட்டியிடும் சுவேந்து அதிகாரியின் சகோதரரின் வாகனமும் எதிர்க்கட்சியினரால் சூறையாடப்பட்டது. கலவரம் மற்றும் வன்முறை தொடர்பாக அங்கு இதுவரை பத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com