\
கோவை: ராஜா வேடமணிந்து 38வது முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்யவந்த சுயேட்சை வேட்பாளர்

கோவை: ராஜா வேடமணிந்து 38வது முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்யவந்த சுயேட்சை வேட்பாளர்

கோவை: ராஜா வேடமணிந்து 38வது முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்யவந்த சுயேட்சை வேட்பாளர்
Published on

கோவையில் ராஜா வேடமணிந்து சுயேட்சை வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நூர் முகம்மது. இவர் சட்டமன்றம் பாராளுமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் 37 முறை போட்டியிட்டுள்ளார். இந்நிலையில், தற்போது 38வது முறையாக சுந்தராபுரம் 94-வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இதற்காக இவர் ராஜா வேடமணிந்து சிப்பாய்களுடன் தள்ளுவண்டியில் அமர்ந்து தெற்கு மண்டல அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தார். இதைக்கண்ட அங்கிருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com