\
நாட்டிலேயே அதிக விருதுகள் பெற்ற மாநிலம் தமிழகம் : முதல்வர் பெருமிதம்

நாட்டிலேயே அதிக விருதுகள் பெற்ற மாநிலம் தமிழகம் : முதல்வர் பெருமிதம்

நாட்டிலேயே அதிக விருதுகள் பெற்ற மாநிலம் தமிழகம் : முதல்வர் பெருமிதம்
Published on

நாட்டிலேயே அதிகமான விருதுகள் வாங்கியிருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். தேனி மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனான ரவீந்திரநாத்குமார், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி‌ அதிமுக வேட்பாளர் மயில்வேல், நிலக்கோட்டை அதிமுக வேட்பாளர் தேன்மொழி, திண்டுக்கல் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்து ஆகியோரை ஆதரித்து தீவிர அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறே உத்தமபாளையம், கோம்பை, போடிநாயக்கனூர், தேனி, லட்சுமிபுரம், பெரியகுளம், தேவதானப்பட்டி, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, விவசாயிகளுக்காக எந்தத் தியாகமும் செய்ய தங்கள் அரசு தயாராக இருக்கிறது என்றும் விவசாயிகள் தான் தங்கள் உயிர் என்றும் பேசினார்.

மேலும் கல்வி, மருத்துவம், வேளாண்மை, மின்சாரம், போக்குவரத்து என பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்கி மத்திய அரசின் விருதுகளைப் பெற்றிருப்பதாகவும், நாட்டிலேயே அதிகமான விருதுகள் வாங்கியிருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான் என்று முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com