பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு

பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு

பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம் பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து வரும் 18-ம் தேதி முதல், நீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பாலாறு பொருந்தலாறு அணை திறப்பு மூலம் 6,168 ஏக்கர் நிலம் பாசன‌ வசதி பெறும் என தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வரதமாநதி அணையிலிருந்து ஆயக்குடி பாப்பன் வாய்க்கால், பெரிய வாய்க்கால், பழனி வாய்க்கால் ஆயக்கட்டுப் பகுதிகளுக்கு வரும் 18-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்றும் இதன் மூலம் 1,545 ஏக்கர் நிலம் பயன்பெறும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து வரும் 17-ம் தேதி நீர் திறக்கப்படும் என்றும் இதனால் 1,744 ஏக்கர் நிலம் பயன்பெறும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியாறு அணையிலிருந்து பிடிஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்காலில் 20-ம் தேதி முதல் நீர்த் திறக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com