\
ஓமலூரில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

ஓமலூரில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

ஓமலூரில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி
Published on

சேலம் ஓமலூரில் அதிமுக மாவட்டத் தலைமை அலுவலகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக மாவட்டத் தலைமை அலுவலகம் 2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பூஜை செய்து திறந்து வைத்தார். அதன் பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர், அலுவலகத்தில் இருக்கும் தங்கும் அறைகள், கூட்ட அரங்கம் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தார். இதனையடுத்து கட்சிப் பணிகள் குறித்தும் நிர்வாகிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com