காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தலைமை வழக்கறிஞர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யும் பட்சத்தில், அதை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையே காவிரி விவகாரம் தொடர்பாக நாளை நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க 10 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.