\
எம்ஜிஆர் நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை

எம்ஜிஆர் நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை

எம்ஜிஆர் நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை
Published on

எம்ஜிஆரின் 30-ஆவது நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள நினைவிடத்தில் முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 30-ஆவது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனிடையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலை பெற்று வருகிறார். தமிழகத்தில் ஆளும் கட்சியாக அதிமுக இருந்தாலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக பின்னடைவையே சந்தித்து வருகிறது. எம்ஜிஆரை முதலமைச்சராக நாற்காலியில் அமர்த்திய இரட்டை இலை சின்னம், அவர் நினைவு நாளில் பின்னடைவை சந்தித்து வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com