ஜெயலலிதா அருளால், மக்கள் ஆதரவால் முதல்வரானேன்: எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா அருளால், மக்கள் ஆதரவால் முதல்வரானேன்: எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா அருளால், மக்கள் ஆதரவால் முதல்வரானேன்: எடப்பாடி பழனிசாமி
Published on

ஜெயலலிதா அருளால், மக்கள் ஆதரவால் முதல்வராகியுள்ளேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ஏழை எளிய மக்கள் கோரிக்கைகள் மற்றும் தேவையறிந்து தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் வனவாசியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கச்சுப்பள்ளியில் அரசு கல்வியியல் கல்லூரி உள்ளிட்ட ரூ.30 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரோகிணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு பாலிடெக்னிக் மற்றும் கல்வியில் கல்லூரிக்கு, முதலமைச்சர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, வனவாசி பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்பட்டதன் வாயிலாக, எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி, ஓமலூர் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த ஏழை எளிய மாணவ-மாணவியர் குறைந்த கட்டணத்தில் கல்வி பயில முடியும் என்று தெரிவித்தார். அத்துடன் வனவாசி அரசு பாலிடெக்னிக் மற்றும் கச்சுப்பள்ளி கல்வியியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை 2018 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் என்றும் கூறினார். கோவை-பெங்களூர் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு அரசு பேருந்து போக்குவரத்து வசதி செய்யப்பட்டிருப்பதாகவும், சாலைகள் அகலப்படுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேச்சேரி, நங்கவள்ளி பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில், ரூ.150 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் நிறைவுறும் தருவாயில் இருப்பதாகவும், நான்கு மாதங்களில் நிலையான பாதுகாக்கப்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டம் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஏழை எளிய மக்கள் விடுக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றி வருவதுடன், பொதுமக்களின் தேவையறிந்து தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com