’’ஒரு எம்.எல்.ஏவுக்கு 15 கோடி ரேட்’’ – ராஜஸ்தானில் அரங்கேறும் குதிரைபேர அரசியல்

’’ஒரு எம்.எல்.ஏவுக்கு 15 கோடி ரேட்’’ – ராஜஸ்தானில் அரங்கேறும் குதிரைபேர அரசியல்
’’ஒரு எம்.எல்.ஏவுக்கு 15 கோடி ரேட்’’ – ராஜஸ்தானில் அரங்கேறும் குதிரைபேர அரசியல்

ஆகஸ்டு 14 ஆம் தேதி ராஜஸ்தான் சட்டசபை கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், 15 கோடி ரூபாய்க்கு எம்.எல்.ஏக்கள் விலை பேசப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார் ராஜஸ்தான் முதல்வர் அகோக் கெலாட்.

முன்னதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், கட்சிக் கொறடா உத்தரவை மீறிய சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிரான வழக்கில், 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவேற்றுவதற்காக முதல்வர் அசோக் கெலாட் மூன்று முறை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை ஆளுநர்  மாளிகை சென்று சந்தித்து பேசினார், ஆனால் ஆளுநர் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அசோக் கெலாட் நான்காவது முறையாக ஆளுநரை சந்தித்து வலியுறுத்திய நிலையில் ராஜஸ்தான் சட்டசபையின் ஐந்தாவது அமர்வை ஆகஸ்ட் 14 முதல் கூட்டுவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்பிறகு ராஜஸ்தானில் குதிரைபேரம் அதிகரித்துள்ளதாக அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார் “சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், குதிரை வர்த்தக பேரங்கள் அதிகரித்துள்ளன. முன்னதாக, எம்.எல்.ஏக்களின் விலை முதலில் ரூ .10 கோடியாகவும், இரண்டாவது ரூ .15 கோடியாகவும் உயர்ந்து உள்ளது. இப்போது அது வரம்பற்றதாகிவிட்டது, யார் குதிரை வர்த்தகம் செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று அவர் கூறியுள்ளார்.

 ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் போர்கொடி தூக்கியது முதல், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 100 பேர் ஜெய்ப்பூர் அருகே உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் இன்று தனி விமானம் மூலம் அவர்கள் அனைவரும் ராஜஸ்தான் எல்லையில் உள்ள ஜெய்சல்மெர் என்ற இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com