\
‘நல்லா டீ போடுறீங்களே’ யாரை பாராட்டினார் முதலமைச்சர்?

‘நல்லா டீ போடுறீங்களே’ யாரை பாராட்டினார் முதலமைச்சர்?

‘நல்லா டீ போடுறீங்களே’ யாரை பாராட்டினார் முதலமைச்சர்?
Published on

சேலத்தில் உள்ள கிராம தேநீர்கடையில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தேநீர் அருந்தினர்.

சேலம் மாவட்டம் சமுத்திரம் கிராமத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார். அங்குள்ள கடை ஒன்றில் தேநீர் அருந்தியுள்ளார். பின்னர் அம்பாள் என்ற கடைக்குச் சென்ற முதலமைச்சர், கிராமத்தில் தேநீர் வியாபாரம் எந்தளவுக்கு நடைபெறுகிறது என கேட்டறிந்ததாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே கடையில் தேநீர் வாங்கி அருந்திய முதலமைச்சர் பழனிசாமி, அதற்கான தொகையை உரிமையாளரிடம் வழங்கினார். அத்துடன் தேநீர் நன்றாக இருக்கிறது எனவும் கடைக்காரரை பாராட்டியுள்ளார். உடனிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் கடையில் தேநீர் அருந்தியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com