ட்விட்டரில் ப்ளூ டிக் பெற்றார் முதலமைச்சர்

ட்விட்டரில் ப்ளூ டிக் பெற்றார் முதலமைச்சர்
ட்விட்டரில் ப்ளூ டிக் பெற்றார் முதலமைச்சர்

தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு ட்விட்டர் வலைதளம் ப்ளூ டிக் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப் பிரபலங்கள் என அனைவருமே ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளனர். ஆனால் அவர்களை பின் தொடரும் ட்விட்டர் கணக்காளர்கள் ப்ளூ டிக் அங்கீகாரத்தை பார்த்த பிறகே கணக்கை உறுதிசெய்கின்றனர். 

தமிழக முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமியும் ட்விட்டரில் பல தகவல்களையும், கருத்துக்களையும் சமீப காலமாக பதிவிட்டு வருகிறார். ஆனால் அவருக்கு ப்ளூ டிக் அங்கீகாரம் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் அவருக்கு ட்விட்டர் வலைத்தளத்தில் ப்ளூ டிக் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கு முன்னதாகவே துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ப்ளூ டிக் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com