‘56 மணி நேர முதல்வர்’எடியூரப்பா ராஜினாமா.....!
நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்ட நிலையில் சட்டப்பேரவையில் உருக்கமாகப் பேசிய பின் எடியூரப்பா ராஜினாமா செய்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்ட எடியூரப்பா, கர்நாடக சட்டப்பேரவையில் உருக்கமாக பேசினார். அப்போது “கர்நாடகா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிப் பெற்றது பாஜகவே. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் என்னை கர்நாடக முதல்வர் வேட்பாளராக அம்பேத்கர் பிறந்த நாளன்று அறிவித்தார்கள். பரப்புரை சமயத்தில் மக்கள் எனக்களித்த ஆதரவை நான் மறக்க மாட்டேன். கர்நாடகா முழுக்க சுற்றி மக்களின் பிரச்னைகளை தெரிந்து கொண்டுள்ளேன். கர்நாடகா மக்கள் மதிப்பும், மரியாதையுடனும் வாழ நினைக்கின்றனர். கர்நாடகா மாநில விவசாயிகளின் நலனுக்காக இறுதிவரை போராடுவேன்” என்று சட்டப்பேரவையில் உருக்கமாக பேசினார். பின் எடியூரப்பா மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கும் என்ற நிலையில் பதவி ஏற்ற 56 மணி நேரத்தில் எடியூரப்பா ராஜினாமா செய்தார். இதற்கு முன் 2007 நவம்பர் 12 முதல் நவம்பர் 19 வரை மொத்தம் 6 நாள்கள் முதலமைச்சராக எடியூரப்பா இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகாவைச் சேர்ந்த அட்டல் பிகாரி வாஜ்பாய் 1996ம் ஆண்டு மே 16 முதல் ஜூன் 1 வரை இந்திய பிரதமராக பணியில் இருந்தார். பெரும்பான்மை இல்லாததால் அவரும் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.