தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 17 சென்டிமீட்டரும் கடலூரில் 13 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது