சென்னையில் பூட்டிக் கிடக்கும் வீடுகள் : பாதுகாக்க காவல்துறை நடவடிக்கை

சென்னையில் பூட்டிக் கிடக்கும் வீடுகள் : பாதுகாக்க காவல்துறை நடவடிக்கை

சென்னையில் பூட்டிக் கிடக்கும் வீடுகள் : பாதுகாக்க காவல்துறை நடவடிக்கை
Published on

ஊரடங்கில் சொந்த ஊரில் சிக்கிக் கொண்டிருப்பவர்களின் வீடுகளை பாதுகாக்க அடையாறு காவல் ஆணையர் விக்ரமன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சென்னை அடையாறு காவல் உதவி ஆணையர் விக்ரமன், ஊரடங்கில் மக்கள் தங்களை தொடர்பு கொள்வதற்கு என்று பிரேத்யக வாட்ஸ் ஆப் எண்ணை உருவாக்கி அதன் மூலம் குறைகளை கேட்டு வருகிறார். அதற்கு மக்களிடம் இருந்துதினமும் ஏராளாமான புகார்கள் வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் விக்ரமன் நேற்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியதாவது “அடையாறு காவல் மாவட்டம் எல்லைக்குட்பட்ட பகுதிகளான அடையாறு, துரைப்பாக்கம், நீலாங்கரை, தரமணி, சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி , செம்மேஞ்சேரி, திருவான்மியூர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியூர் செல்லும்போதும், தற்காலிகமாக தங்களுடைய வீட்டை பூட்டிச் செல்லும் போதும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவியுங்கள் அல்லது 87544 01111 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

அதில் வீட்டின் முகவரி, எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை மூடப்பட்டிருக்கும் மற்றும் தொடர்பு கொள்ளவேண்டிய எண்ணையும் குறிப்பிட வேண்டும் . மக்கள் தகவல் தெரிவிக்கும் படசத்தில் ரோந்து பணிக்காகச் செல்லும் காவலர்கள் உங்கள் வீடுகளுக்கு தனிக்கவனம் கொடுப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com