\
ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தள்ளுமுள்ளு

ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தள்ளுமுள்ளு

ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தள்ளுமுள்ளு
Published on

ஆர்.கே.நகர் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள், கட்சிகளின் முகவர்கள் முன்னதாகவே அனுமதிக்க வலியுறுத்தியதால் காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் இடையே சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ பதவிக்கு கடந்த 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 77.5 சதவித வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை ராணி மேரி கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. மின்னணு இயந்திரங்களுக்கு வைக்கப்பட்ட சீல் இன்று காலை 8 மணிக்கு உடைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்களின் முகவர்கள், பத்திரிகையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் கட்சிகளின் முகவர்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட முன்னதாகவே தங்களை அனுமதிக்க வலியுறுத்தியதால் போலீசாருக்கும் முகவர்களுக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com