டிரெண்டிங்
தலைமை அலுவலகத்திற்கு வந்த தலைவர்கள் - தொடங்கியது அதிமுக செயற்குழு கூட்டம்
தலைமை அலுவலகத்திற்கு வந்த தலைவர்கள் - தொடங்கியது அதிமுக செயற்குழு கூட்டம்
அதிமுக தலைமை அலுவலத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல் பன்னீர் செல்வம் ஆகியோர் வருகை தந்த நிலையில், தற்போது அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.
2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.
செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல் பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமை அலுவலத்திற்கு வந்து சேர்ந்தனர். இருபக்கமும் கூடிய அவர்களது ஆதரவாளர்கள் தலைவர்களுக்கு ஏகோபித்த வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் தற்போது செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.