முதலமைச்சர் மாற்றப்படுவார்: முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை

முதலமைச்சர் மாற்றப்படுவார்: முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை
முதலமைச்சர் மாற்றப்படுவார்: முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை

செயல்பாடுகள் சரியில்லை என்றால் முதலமைச்சர் மாற்றப்படுவார் என முன்னாள் அமைச்சரும் டிடிவி.தினகரன் ஆதரவாளருமான பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேருந்தில் பயணிக்கிறோம். பேருந்தை விட்டு இன்னும் நாங்கள் இறங்கவில்லை.ஒட்டுநர் பேருந்தை ஓட்டுவது சரியில்லாமல் இருக்கக்கூடிய ஒரு உணர்வு எங்களுக்குள் எழுந்திருக்கிறது. ஆகவே இந்தப் பேருந்து ஆபத்தான வழியில் செல்லக்கூடாது. இது ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட பேருந்து. அதில் பயணம் செய்பவர்கள் எல்லாம் ஜெயலலிதாவின் விசுவாசிகள். ஆகவே இந்தப் பேருந்து நல்லவழியில் பத்திரமாக சென்று சேரவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். டிரைவர் சரியில்லை என்றால் அவரை மாற்றுவதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம்’என்று தெரிவித்தார். பேருந்து என்று தற்போதைய ஆட்சியையும் ஓட்டுநர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் அவர் குறிப்பிட்டு பேசினார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com