டிரெண்டிங்
எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் பேச வேண்டும்: தோப்பு வெங்கடாசலம்
எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் பேச வேண்டும்: தோப்பு வெங்கடாசலம்
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் அழைத்து பேச வேண்டும் என, தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
தினகரன் அணியில் இருந்த தோப்பு வெங்கடாசலம், அணிகள் இணைப்புக்கு பிறகு வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவர் தினகரன் அணியில் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், நாளை தனது முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தார்.
அதன்படி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் எந்த அணியிலும் இல்லை என்று விளக்கமளித்தார். இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்பதே விருப்பம் என தெரிவித்த அவர், அ.தி.மு.க. அணிகள் இணைந்தது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.