தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர்

தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர்
தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர்
Published on

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 212-வது நினைவு நாளை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை கிண்டி தொழிற்பேட்டையிலுள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி நடராஜன், பெஞ்சமின், பாலகிருஷ்ண ரெட்டி, தமிழரசி, எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் அங்கு வந்திருந்த மாணவர்களுக்கு முதலமைச்சர் திருக்குறள் புத்தகத்தை வழங்கினார். முதல்வர் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com