டிரெண்டிங்
முதல்வர் பழனிசாமி பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு
முதல்வர் பழனிசாமி பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வலியுறுத்தி வரும் 21-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் இது தமிழகத்துக்கு செய்த பச்சை துரோகம் என்றும் கூறினார். இதன் காரணமாக முதலமைச்சர் பழனிசாமி பதவியில் இருந்து விலக வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் வைகோ தெரிவித்தார்.