ஆரவாரமில்லாமல் தனி ஆளாக நடந்து வந்து வேட்புமனுவை தாக்கல் செய்த முதல்வர் பழனிசாமி!

ஆரவாரமில்லாமல் தனி ஆளாக நடந்து வந்து வேட்புமனுவை தாக்கல் செய்த முதல்வர் பழனிசாமி!

ஆரவாரமில்லாமல் தனி ஆளாக நடந்து வந்து வேட்புமனுவை தாக்கல் செய்த முதல்வர் பழனிசாமி!
Published on

எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்காக முதலமைச்சர் பழனிசாமி ஆரவாரமில்லாமல் சாலையில் நடந்துவந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

1989ஆம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எடப்பாடி பழனிசாமி. 1991, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். இதுவரை சட்டப்பேரவை தேர்தலில் 6 முறை வெற்றிபெற்ற பழனிசாமி 2 முறை தோல்வியை தழுவியுள்ளார்.

இந்நிலையில் எடப்பாடி தொகுதியில் 7வது முறையாக போட்டியிடும் முதல்வர் பழனிசாமி எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயக்குமார் ஆகியோர் படை சூழ ஆயிரக்கணக்கான தொண்டர்களோடு வந்து வேட்புமனுவை தாக்கல் செய்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியாக நடந்து வந்து ஆரவாரமில்லாமல் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

<iframe width="716" height="403" src="https://www.youtube.com/embed/oYK9hUosbSQ" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com