\
தேர்தல் ஆணையர்கள் இன்று ஆலோசனை

தேர்தல் ஆணையர்கள் இன்று ஆலோசனை

தேர்தல் ஆணையர்கள் இன்று ஆலோசனை
Published on

தமிழகத்தில் நடைபெறயுள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இன்று இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவு நெருங்கிவிட்ட நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், தேர்தல் அதிகாரிகள் வாக்குப் பதிவிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளனர்.

இதற்காக டெல்லியில் இருந்து தேர்தல் ஆணையர்கள் ‌அசோக் ‌‌லவசா, சுஷீல்‌ சந்திரா‌ மற்றும் தேர்தல் ஆணைய இயக்கு‌நர்கள் திலீப் சர்‌‌மா, திரேந்திர ஓஜா ஆகியோர் நேற்று சென்னை வந்தனர். தனியார் ஹோட்டலில் இன்று காலை 10 மணியளவில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். அப்போது, தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்தும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

இதனைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது‌. இதனையடுத்து நாளை காவல்துறை உயரதிகாரிகள், டிஜிபிக்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தும் தேர்தல் ஆணையர்கள், அதன் பின்னர் தமிழக அரசின் முதன்மை செயலாளர், வருமானவரித்துறை உயரதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொள்கின்றனர். மேலும் தலைமை தேர்தல் அதிகாரி அரோராவின் பயணத்தில் வேலூரில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com