\
"எதையும் மறைக்கவில்லை" -சிதம்பரம் ஆடிட்டர் விளக்கம்

"எதையும் மறைக்கவில்லை" -சிதம்பரம் ஆடிட்டர் விளக்கம்

"எதையும் மறைக்கவில்லை" -சிதம்பரம் ஆடிட்டர் விளக்கம்
Published on: 

வருமான வரித்தாக்கலில் வெளிநாட்டு சொத்துக்கள் எதையும் மறைக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். 

வெளிநாடுகளிலுள்ள சொத்துக்களை தெரிவிக்காமல் மறைத்தப் புகாரில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி, மகன் கார்த்தி மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் மீது கறுப்புப்பணத் தடுப்புச்சட்டத்தின் கீழ் 4 புகார்களை பதிவு செய்துள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கறுப்புப்பணத் தடுப்புச்சட்டம் பிரிவு 50ன் கீழ் இந்தப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மற்றும் மகன் கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி சார்பில் அக்குடும்பத்தின் ஆடிட்டர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருமானவரி சட்டத்தின் கீழ் முறையாக வருமானவரிக்கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ள சொத்துகள் எதையும் மறைக்கவில்லை என்றும், விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வருமானவரித்துறையின் புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com