துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே கட்சி பாஜக ! ப.சிதம்பரம்

துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே கட்சி பாஜக ! ப.சிதம்பரம்

துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே கட்சி பாஜக ! ப.சிதம்பரம்
Published on

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100-ஆவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆட்சியர் அலுவகத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 10-ஆம் வகுப்பு மாணவி உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டது தமிழக அரசு.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் அதில் " காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே அரசியல் கட்சி பாஜக. தமிழ்நாடு அரசை யார் நடத்துகிறார்கள் என்று இப்பொழுது தெரிகிறதா ? தூத்துக்குடி பெருந்துயரத்திற்கு யார் காரணம்? 1. சிந்தனையும் செயலும் இழந்த மாநில அரசு. 2. சீரிய தலைமையும் போதிய பயிற்சியும் இல்லாத காவல் துறை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்தவர்களுக்கு என்னுடைய ஆறுதல் மற்றும் பூரண குணமடைய வாழ்த்து" என கருத்தி்ட்டுள்ளார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com