\
‘நாயை விரட்டு விரட்டு என விரட்டும் கோழி’ - மனதைக் கவர்ந்த வீடியோ!

‘நாயை விரட்டு விரட்டு என விரட்டும் கோழி’ - மனதைக் கவர்ந்த வீடியோ!

‘நாயை விரட்டு விரட்டு என விரட்டும் கோழி’ - மனதைக் கவர்ந்த வீடியோ!
Published on: 

இணையதளத்தில் அவ்வப்போது வெளியாகும் வீடியோக்கள் பல நேரங்களில் நம்மை மகிழ்விக்கும். அதிலும் விலங்குகள் மற்றும் பறவைகளின் வித்தியாசமான செயல்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தும்.

அந்த வகையில் இன்று ’வென் அனிமல்ஸ் அட்டாக்’ வெளியிட்ட வீடியோ ஒன்று பலரின் மனதை மகிழ்வித்துள்ளது. வென் சிக்கன்ஸ் அட்டாக் என தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில் ஒரு நாயை கோழி ஒன்று துரத்தி வருகிறது. அடுக்கி வைக்கப்பட்டுள்ள மரக்கட்டைகளை சுற்றி சுற்றி ஓடி விளையாடுகிறது அந்த கோழியும், நாயும்.

கோழி முன்பாக வந்தால் அதைப் பார்த்து எதிர்பக்கத்தில் ஓடுகிறது நாய். கோழியும் முன்னும் பின்னுமாக அந்த நாயைத் துரத்திச் செல்கிறது. வெளியிட்ட சிறிது நேரத்திலேயே பலரும் லைக் செய்துவருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com