900 அடி வரை கீழிறங்கிய சென்னை சுற்றுப்புற நீர் மட்டம்

900 அடி வரை கீழிறங்கிய சென்னை சுற்றுப்புற நீர் மட்டம்

900 அடி வரை கீழிறங்கிய சென்னை சுற்றுப்புற நீர் மட்டம்
Published on

கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக கீழே சென்றுள்ளது. சென்னையின் சுற்றுப்புறப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் 900 அடி வரை கூட கீழே இறங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னைக்கு அருகில் உள்ள மறைமலைநகரில் நீரைப் பெற 900 அடி ஆழம் வரை ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டியிருப்பதாக அத்தொழிலில் ஈடுப்பட்டு வருபவர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம், சென்னை நகரப் பகுதிக்குள், பல பகுதிகளில் நீர்மட்டம் சுமார் 800 அடி ஆழம் வரை கீழிறங்கியிருப்பதாகக் ஆழ்துளைக்கிணறு தோண்டும் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.

நகரின் தென் பகுதியில் உள்ள குரோம்பேட்டை, பல்லாவரம் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீரைப் பெற 800 அடி ஆழம் வரை செல்ல வேண்டியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். அடுத்ததாக, அம்பத்தூர், ஆவடி, வேளச்சேரி, கிண்டி ஆகிய பகுதிகளில் 600 முதல் 700 அடி ஆழத்தில் மட்டுமே நீர் வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

தி‌ருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு பகுதிகளில் 500 அடியிலும், திருவொற்றியூர், கே.கே.நகர், அசோக் நகர் ஆகிய பகுதிகளில் 400 அடியிலும், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு ஆகிய பகுதிகளில் 300 முதல் 400 அடி ஆழத்திலும் மட்டுமே நிலத்தடி நீர் கிடைப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கடலோரப் பகுதிகளான ராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, அடையார், பெசண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 100 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைப்பதாக ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com