சென்னை: அமைச்சர் பெஞ்சமினுக்கு வாக்கு சேகரித்த சிறுவர் சிறுமியர்

சென்னை: அமைச்சர் பெஞ்சமினுக்கு வாக்கு சேகரித்த சிறுவர் சிறுமியர்

சென்னை: அமைச்சர் பெஞ்சமினுக்கு வாக்கு சேகரித்த சிறுவர் சிறுமியர்
Published on

மதுரவாயில் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் பெஞ்சமின் வாக்கு சேகரித்து வந்தபோது தொண்டர்கள் 108 தேங்காய் உடைத்ததோடு மலர்தூவி உற்சாக வரவேற்பளித்தனர். அமைச்சருக்கு ஆதரவாக சிறுவர், சிறுமிகளும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் பரப்புரை முதலான நடவடிக்கைகளில் சிறுவர்களை ஈடுபடுத்துவது விதிமீறில் என்பது கவனிக்கத்தக்கது.

மதுரவாயில் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமினுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் அமைச்சர் பெஞ்சமின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

முகப்பேர் பகுதியில் வாக்கு சேகரித்த அமைச்சர் பெஞ்சமினுக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழியெங்கிலும் செண்டை மேளம் முழங்க மாலை அணிவித்து வரவேற்பளித்தனர். குறிப்பாக பெண்கள் ஆரத்தி எடுத்தும் 108 தேங்காய் உடைத்தும் வரவேற்றனர். அப்போது அங்கிருந்த சிறுவர், சிறுமியர் எடப்பாடி உருவம் பதித்த பதாகையுடன் அமைச்சருக்கு வாக்கு சேகரித்தனர்.

மேலும் முகப்பேர் கருமாரியம்மன் தெருவில் அமைச்சரை வரவேற்க வாழை, தோரணத்துடன் திருவிழாபோல் மேளம், கரகாட்டம் என கலைக்கட்டியது. அப்போது வாக்கு சேகரிக்க வந்த அமைச்சருக்கு தொண்டர்கள் மொட்டை மாடியில் இருந்து மலர்களை தூவி வரவேற்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com