ஐபிஎல் 2022: டாஸ் வென்று சிஎஸ்கே பவுலிங்கை தேர்வு - முதல் வெற்றியை பதிவு செய்யுமா?

ஐபிஎல் 2022: டாஸ் வென்று சிஎஸ்கே பவுலிங்கை தேர்வு - முதல் வெற்றியை பதிவு செய்யுமா?
ஐபிஎல் 2022: டாஸ் வென்று சிஎஸ்கே பவுலிங்கை தேர்வு - முதல் வெற்றியை பதிவு செய்யுமா?

ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து முதல் வெற்றியை பதிவு செய்யும் உத்வேகத்தில் களமிறக்கும் சென்னை அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்திக்கிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஜடேஜா பவுலிங்கை தேர்வு செய்தார்

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் பணிந்தது. அதைத் தொடர்ந்து லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 210 ரன்கள் குவித்தும் டெத் ஓவர்களில் சொதப்பி தோல்வியை தழுவியது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் இரு ஆட்டங்களில் தோற்றிருப்பது இதுவே முதல்முறை. இன்று மீண்டும் ஏமாற்றினால் 'ஹாட்ரிக்' தோல்வியை சந்திக்க நேரிடும். எனவே சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் 206 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து மிரட்டிய பஞ்சாப் அணி, அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் 137 ரன்னில் சுருண்டு தோற்றது. பஞ்சாப் அணியில் கேப்டன் மயங்க் அகர்வால், ஷிகர் தவான், ஷாருக்கான், ஒடியன் சுமித், பானுகா ராஜபக்சே என்று அதிரடி சூரர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். பந்து வீச்சை பொறுத்தவரை காஜிசோ ரபடா, ராகுல் சாஹர் கட்டுக்கோப்புடன் வீசுவதில் கில்லாடிகள். அதனால் சென்னை அணியின் பேட்டிங்கிற்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. 

பனியின் தாக்கம் காரணமாக டாஸ் வெல்லும் கேப்டன்கள் சேஸிங்கையே தேர்வு செய்து வருகின்றனர். அதுபோல இன்று டாஸ் வென்ற அணியின் கேப்டன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஜடேஜா பவுலிங்கை தேர்வு செய்தார். ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து முதல் வெற்றியை பதிவு செய்யுமா சிஎஸ்கே? 7.30 மணிக்கு துவங்கும் ஆட்டத்தில் தெரிந்துவிடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com