’கோவை மாநகராட்சி தேர்தல் முடிவு இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது’ - சென்னை உயர் நீதிமன்றம்

’கோவை மாநகராட்சி தேர்தல் முடிவு இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது’ - சென்னை உயர் நீதிமன்றம்
’கோவை மாநகராட்சி தேர்தல் முடிவு இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது’ - சென்னை உயர் நீதிமன்றம்

கோவை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோவையில் அனைத்துக் கட்சியினரும் பாகுபாடில்லாமல் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பணப்பட்டுவாடா குறித்து விசாரணை நடத்த உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கக் கோரி ஈஸ்வரன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோவை மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு தடை இல்லை எனக் கூறியிருக்கிறது. மேலும், பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com