தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறக்கக்கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறக்கக்கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறக்கக்கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகிறது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் வி.பவானி ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை இந்த வழக்கின் தீர்ப்பினை வழங்கவிருக்கிறது. 

ஸ்டெர்லைட் ஆலை நோய் பரப்புவதாக கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி பொது மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். அப்போது போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அந்த ஆலையை உடனே மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி மே மாதம் 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2019 பிப்ரவரி 27ல் வழக்கு தொடர்ந்தது.

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு கோரிக்கையை  எதிர்க்கும் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, தூத்துக்குடியை சேர்ந்த பேராசிரியை பாத்திமா, அர்ஜூனன்,  மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு நிர்வாகி ஹரி ராகவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ஜூனன் ஆகியோர் இடையீட்டு மனுதாரர்களாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீதிபதிகள் ட்டி.எஸ்.சிவஞானம், வி. பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர். 39 நாட்கள் விசாரிக்கப்பட்ட வழக்கு 2020 ஜனவரி 8 தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com