\
திமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு ஒருநாள் காவல் : நீதிமன்றம் உத்தரவு

திமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு ஒருநாள் காவல் : நீதிமன்றம் உத்தரவு

திமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு ஒருநாள் காவல் : நீதிமன்றம் உத்தரவு
Published on

திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் திமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு ஒருநாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.

திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் இதயவர்மன் உள்ளிட்டோர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது.

இதைத்தொடர்ந்து இதயவர்மன் உள்ளிட்டோரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பு அனுமதி கோரியிருந்தது. வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், இதயவர்மனை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தது. முன்னதாக, திருப்போரூரில் ஏற்பட்ட நிலத்தகராறில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com