5 வயசுல இருந்தே இதுதான் குயின் எலிசபெத்தின் உணவு.. சீக்ரெட் உடைத்த பிரபல செஃப்!
ராயல் வாழ்க்கைனு சொன்னதுமே பொதுவாகவே அனைவர் நினைப்பிலும் “ஆமா இவங்க பெரிய இங்கிலாந்து ராணி அல்லது லண்டன் இளவரசு” அப்படினுதான் தோன்ற வைக்கும். ஏனெனில், சாமானிய மக்களே தங்களுக்கான உடமைகளை வாங்கும்போது ரொம்பவே மெனக்கெடுவார்கள் அல்லது ஒரே நிறத்திலான ஆடைகளை வாங்குவதை தவிர்ப்பார்கள்.
அதேபோல வெளியே சாப்பிட சென்றாலும் விதவிதமான உணவுகளை சாப்பிடவே பெரும்பாலான மக்கள் விரும்புவார்கள். ஆனால், உண்மையிலேயே இங்கிலாந்தின் இரண்டாவது குயின் எலிசபெத் தன்னுடைய 5 வயது முதலே ஒரே வகையிலான சாண்ட்விச்சைதான் சாப்பிட்டு வருகிறார் என்பது தெரியுமா?
குயின் எலிசபெத்தின் இந்த பழக்கத்தை அவரது பிரத்யேக செஃபாக இருந்த மெக் க்ராடி உலகுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார். மெக் க்ராடி குயின் எலிசபெத்திற்கு 15 ஆண்டுகளாக தனிப்பட்ட சமையலராக பணியாற்றியிருக்கிறார். இளவரசி டையானாவிற்கும், இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோருக்கும் செஃப் மெக் க்ராடி சமையலராக இருந்திருக்கிறாராம்.
ராணி எலிசபெத்தின் உணவு பழக்கம் குறித்து யூடியூபில் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் செஃப் மெக் க்ராடி. அதில், “வெறும் பிரட்டில் கொஞ்சம் ஜாமும், பட்டரும் தடவிய சாண்ட்விச்சைதான் குயின் எலிசபெத் பல ஆண்டுகளாக சாப்பிட்டு வருகிறார்.
இதுதான் அவரது மதிய உணவுக்கு பிந்தைய டீ டைமிற்கான ஸ்நாக். அந்த ஜாம் ஸ்காட்லாந்து தோட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஸ்ட்ராபெர்ரியால் தயாரிக்கப்பட்டதாகும். ராணிக்கு வெள்ளரி, மின்ட் க்ரீம் சீஸ் மற்றும் தக்காளி, சீஸால் தயாரிக்கப்பட்ட சாண்ட்விச்சும் பிடித்தமானவைதான். ஆனால் அவரது ஆல் டைம் ஃபேவரைட்டாக இருப்பது ஜாம் பிரட்தான்.” இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் குயின் எலிசபெத்தின் எளிமையை கண்டு வியந்துப்போய் பதிவிட்டிருக்கிறார்கள்.