அமைச்சர் பெயரில் மோசடி செய்த நபர் கைது

அமைச்சர் பெயரில் மோசடி செய்த நபர் கைது

அமைச்சர் பெயரில் மோசடி செய்த நபர் கைது
Published on

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பெயரைக் கூறி பணம் பறித்து வந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியிலுள்ள லிஸ்டர் தனியார் மருத்துவமனை உரிமையாளரான மருத்துவர் அரவிந்த் விஜயனிடம், தொலைபேசியில் பேசிய ஒருவர், மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் உதவியாளர் எனக் கூறி, கட்சி நிதிக்காக 3 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். போனில் பேசியவர் மீது சந்தேகம் அடைந்த அமைச்சரின் உறவினரான அந்த மருத்துவர், பணம் தருவதாகக் கூறி அவரை வரக்கூறியுள்ளார். இதுதொடர்பாகவும் அந்த மருத்துவர், காவல்நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற மருத்துவமனைக்கு வந்த அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த முகமது மீரான் என்பது தெரியவந்தது. அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமானோரிடம் மத்திய அமைச்சரின் பெயரைக் கூறி பணம் பறித்துள்ளதும் தெரியவந்துள்ளது. கைதான முகமது மீரானை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவரை 13 நாள் காவலில் வைக்க நீதிபதிகள்
உத்தரவிட்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com