\
சொத்திற்கு ஆசைப்பட்டு ஜெயலலிதா மகள் என கூற வாய்ப்பு: நடிகை லதா

சொத்திற்கு ஆசைப்பட்டு ஜெயலலிதா மகள் என கூற வாய்ப்பு: நடிகை லதா

சொத்திற்கு ஆசைப்பட்டு ஜெயலலிதா மகள் என கூற வாய்ப்பு: நடிகை லதா
Published on

சொத்துக்கு ஆசைப்பட்டு ஜெயலலிதா மகள் என்று சொல்ல வாய்ப்புள்ளதாக நடிகை லதா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு தெரிந்தவரை ஜெயலலிதாவுக்கு மகள் யாரும் கிடையாது என தெரிவித்துள்ளார். மேலும் லதா கூறுகையில், ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுகள் கூட இருந்தேன் என்று கூறிய சசிகலா 30 நாட்கள் கூட துக்கம் அனுசரிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டவர்கள், அவரின் உடல் அருகே சுற்றி நின்றதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என லதா கூறினார்.

பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண், தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த அவர், ஜெயலலிதாவின் உடலை தோண்டி டி.என்.ஏ. சோதனை செய்தால்தான் ஜெயலலிதா மகள் என்பது தெரியவரும் என்று கூறியிருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com