வாக்கு சதவீதத்தை உயர்த்த மை விரலுடன் கூடிய செல்ஃபி பரிசுப்போட்டி!

வாக்கு சதவீதத்தை உயர்த்த மை விரலுடன் கூடிய செல்ஃபி பரிசுப்போட்டி!

வாக்கு சதவீதத்தை உயர்த்த மை விரலுடன் கூடிய செல்ஃபி பரிசுப்போட்டி!
Published on

91 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (11.04.2019) தொடங்கும் என இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து 20 மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கான  பரப்புரை முடிவடைந்துவிட்டது. இந்நிலையில், மிசோரம் மாநிலத்திற்கு நாளை 1 மக்களவை தொகுதிக்கு நடைபெறவுள்ள நிலையில் வாக்கு சதவீதத்தினை உயர்த்த அம்மாநில தேர்தல் ஆணையம் புதுவிதமான யுக்தி ஒன்றை செயல்படுத்தியுள்ளது. இம்மாநிலத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7, 23,663 ஆக உள்ளது.

Get ready for a selfie competition. Take a selfie and post it on instagram with the tag #MizoramVotes on the election day.#GeneralElections2019 #LokSabhaElection2019@ecisveep#novotertobeleftbehind pic.twitter.com/ZCRii7VjFj
— CEO_MIZORAM (@mzelection) April 8, 2019

இம்மாநிலத்தில் கடந்த மக்களவை பொதுத்தேர்தலில் குறைந்த வாக்குகளே பதிவான நிலையில், இம்முறை வாக்கு சதவிகிதத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு யுக்திகளையும், விழிப்புணர்வுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இதில் மிசோரம் மாநில மக்கள் மற்றும் இளம் வாக்களர்களை ஈர்க்கும் வகையில் செல்ஃபி பரிசுப்போட்டி ஒன்றை அம்மாநில தேர்தல் ஆணையத்தின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில் மிசோரம் மாநிலத்தில் நாளை (11.04.2019) நடைபெறும் மக்களவை தேர்தலில் வாக்கு செலுத்துபவர் குழுவாகவோ, தனியாகவோ இந்த போட்டியில் பங்கேற்கலாம். அதற்கான சில விதிகளையும் அம்மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அதில் வாக்கு செலுத்துவதற்கு முன் அதாவது வாக்கு செலுத்தும் போது வரிசையில் நிற்பது போன்று ஒரு செல்ஃபி புகைப்படம், வாக்கு செலுத்திய பிறகு மை வைத்த விரலுடன் தனியாகவோ அல்லது குழுவாகவோ ஒரு செல்ஃபி புகைப்படம், நல்ல வாசகம் அடங்கிய தலைப்பின் கீழ் அந்த புகைப்படங்களை #MizoramVotes - என்ற ஹாஸ்டேக் உடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுப்பவேண்டும். அதுமட்டுமல்லாமல் 9089329312 என்ற தொலைபேசியின் வாட்ஸ்-அப் எண்ணிலும் அந்த புகைப்படத்தை நாளை (11.04.2019) மாலை 07.00 மணி வரை அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிபெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.7,000 ஆகவும், இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசாக ரூ.3,000 ஆகவும் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது, மிசோரம் மாநில தேர்தல் ஆணையம். அதுமட்டுமின்றி, வெற்றிபெறுவோருக்கு சான்றிதழ்களும் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மிசோரத்தை தொடர்ந்து அனைத்து மாநிலத்தில் இது போன்ற பல்வேறு புதுமையான பரிசுப்போட்டியை அறிவித்தால் மக்களிடையே வாக்களிக்கும் ஆர்வம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com