மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்கிறது: தம்பிதுரை
ஒகி புயல் மீட்பு பணிக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
மக்களவை துணை சபாநயகர் தம்பிதுரை, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்து, ஒகி புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, “மீனவர்களை காப்பதில் மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் பணிகளால் 3 ஆயிரம் மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அருண்ஜெட்லி, ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை வைத்துள்ளேன்” என்றார்.
மேலும், “மீட்பு பணி தொடர்ந்து தொய்வில்லாமல் நடைபெற்று வருகிறது. சுமார் 23 கப்பல்கள், 8 விமானங்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. மீனவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. தமிழக அரசு மீனவர்களின் நண்பன்” என்று கூறினார்.

