“சாதிப்பற்று இருப்பது தவறில்லை” - அமைச்சர் கே.பாண்டியராஜன்
சாதிப்பற்று இருப்பது தவறில்லை என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் அகில இந்திய நாடார் பேரவை சார்பில் நடைபெற்ற நாடார் சங்கமம் நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது, ஒவ்வொரு சமுதாயத்துக்கும் மரபணு இருப்பதாகவும் சாதிப்பற்று தவறில்லை என்றும் அமைச்சர் பேசியுள்ளார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன் பேசுகையில், “ஒவ்வொரு மனிதனுக்கு ஒரு மரபணு உள்ளது. அதேபோல், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் மரபணு உள்ளது. அந்த மரபணுவில் சமுதாயத்தின் அடையாளமாக எது இருக்கிறது. பரம்பரை பரம்பரையாக ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது என்று சொல்வோம். சாதிப்பற்று இருப்பது தவறு கிடையாது. சாதிவெறி இருக்கக் கூடாது. இன்னொரு சாதியை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கக் கூடாது. நம்ம சமுதாயம் வளர வேண்டும் என்பதில் உலகம் முழுக்க மாற்றுக் கருத்துக் கிடையாது” என்றார்.