டிரெண்டிங்
பொன்.ராதாகிருஷ்ணன் மீது விதிமீறல் வழக்குப் பதிவு
பொன்.ராதாகிருஷ்ணன் மீது விதிமீறல் வழக்குப் பதிவு
கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
கடந்த 30-ஆம் தேதி தக்கலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திறந்த வாகனத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பரப்புரை செய்தார். அவருக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சியினரும் பல வாகனங்களில் சென்று வாக்கு சேகரித்தனர். எவ்வித முன் அனுமதியுமின்றி கட்சி கொடிகள் கட்டிய 4 மற்றும் 2 சக்கர வாகனங்களில் பொன்.ராதாகிருஷ்ணன் பரப்புரை மேற்கொண்டதாக, தேர்தல் ஆணையத்தின் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் தாஜ் நிஷா தக்கலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடன் வாகனங்களில் சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.